Saturday 18 June 2011

பழமொழி அர்த்தமும் அனர்த்தமும்

தமிழ் இலக்கியங்களில் மரு மொழி என்றொரு பகுதி உண்டு அதாவது காலப்போக்கில் மாறிவிடும் பெயர் வழக்கு. இது பெரும்பாலும் ஊர் பெயர்களாகவோ ஒரு இடத்தின் பெயர்களாகவோ இருக்கும். உதாரணமாக மதுரைக்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் சோழன் உவந்த ஊர் பின்பு காலப்போக்கில் மருவி தற்போது சோழவந்தான் என்று அழைக்கபடுகிறது. இத போல் நமது பழமொழிகளும் நம் மக்களின் வசதிக்கேற்பவோ அல்லது மருவியோ அர்த்தங்கள் மாறி அபத்தமாகி விட்டன.

1.சேலை கட்டிய மாதரை நம்பாதே என்றொரு பழமொழி வழக்கத்தில் உள்ளது. ஆனால் உண்மையில் பழமொழி "சேள் அகட்டிய  மாதரை நம்பாதே" என்பதே.  சேள் என்றால்  கண், அகட்டிய என்றால் சிமிட்டுதல் அதாங்க கண் அடிக்கிற ஒழுக்கம் பிறழ்ந்த பெண்ணை நம்பக்கூடாது என்பதுதான் உண்மையான  பொருள்.
2. களவும் கற்று மற  இது ஒரு பழமொழி இதன்படி பொருள் கூர்ந்தால்  களவை வசதியாக கற்று நன்றாக திருடி செட்டில் ஆனபிறகு மறந்துவிடு எனபது போல் உள்ளது. ஆனால் களவும் + அகற்று + மற = அதாவது களவு என்ற எண்ணமே மனதில் வராமல் அகற்ற வேண்டும் பின்பு அப்படியொரு எண்ணம் தோன்றி அகற்றிய நிகழ்ச்சியைக்கூட மறந்து விட வேண்டும் என்பதாகும் .


No comments:

Post a Comment