Saturday 18 June 2011

என்னை செதுக்கியவர்கள்

முதல் பள்ளி அனுபவம்
மனதில் பசுமரத்து ஆணியாய்

என் வலது கரம் வளைத்து
இடது செவி தொட
முடிந்தது நுழைவு தேர்வு

முதுகில் சத்துணவு தட்டு
கட்டி தொடங்கியது
என் முதல் பள்ளி பயணம்

பெருமாள் வாத்தியார்
மூக்குப்பொடியால் பழுப்பான
நாசி
சிவந்து தெறித்து விழும்
விழி
என் முதல் வகுப்பு
வாத்தியார்
கேட்டாலே மிரட்டும்
குரல்

பாடம் கூட கரகரப்பு
குரலில் பாட்டாய் செவிகுழி
மிரட்டும்

காலையில் பள்ளி சுத்தம்
செய்ய பேப்பர் பொறுக்குவதற்கு
சத்துணவுக்கு முன்
காலையில் கடவுள் வாழ்த்து
என முழங்கும் அவர் குரல்
என்னுள் இடியாய் அதிரும்

ஒரு இருபத்தைந்து பைசா
கேட்டு அடம்பிடிக்க
வடம்பிடித்து இழுக்கும்
தேராய் இழுத்து   சென்று
அவர் முன் என் அம்மா
நிறுத்த

நாசி சொரிந்த கரம் எடுத்து
என்னை முதன் முதலாய்
முதுகில் மட்டும்  அல்ல
வாழ்க்கையிலும் செதுக்கியவர் 






No comments:

Post a Comment