Sunday 1 July 2012


பாரதி பார்வையில் இன்றைய பாரதம்


"அமலா பால்" அளவிற்கு
தமிழ் பால் ஈந்த  
பாரதி பரீட்சயம் இல்லை
நமக்கு
அதனால் இந்த அறிமுகம் 

பாரதீ தன்
பேருக்குள்ளே தீயை
வைத்த பெருங்கவி 
தன் முண்டசுக்குள் 
மூடத்தனத்தை கட்டிப்போட்ட 
புரட்சிக்கவி

விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்தான்
தான் அடிமை விலங்கு 
ஒடித்த பாரதம் நோக்கி

வந்திறங்கிய இடம்
சமத்துவம் நிலவும் 
டாஸ்மாக் கடை

நிமிர்ந்த நடை 
நேர்கொண்ட பார்வை
என்று சொன்ன பாரதியிடம்
தள்ளாடிவந்தான்
தமிழ் குடிமகன்

என்ன மகனே
பசியா? என
பரிவாய் கேட்டான்
நேச கவி

இல்லை இல்லை 
போலி மதுவால் 
போதை என்றான்

மீண்டும் தொடர்ந்தான் 
நீங்கள் என்ன 
அரசு அதிகாரியா?
மதுக்கடையில் ஆய்வா?
போலிகளை பிடித்து 
நயம் சரக்காய் வைக்க 
சொல்லுங்கள் - என 
நக்குழறி நகர்ந்தான்
 
பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதம் என்றேனே -அது
இதுதானா?
என பரிதவித்தான் பாரதி

அங்கிருந்து அகன்று
மெதுவாய் வந்து 
நின்றான்
ஆடம்பர அங்காடி முன்

ஐயா என தடுத்து 
நிறுத்தினான் ஒருவரை
அய்யோ 
நான் ஆண் அல்ல 
பெண் என்றால்

பெண்ணுரிமை கிடைத்ததா?
என பெருந்தவிப்புடன் 
கேட்டான் பாரதி

ஆறடி கூந்தல் அரை அடியாய்
அதுவும் அவிழ்ந்த நிலையில்
உதட்டு சாயம் நாவால் தடவி
நவின்றால் அவள்

தனக்கு வீட்டில் 
துணிதுவைக்கும் கணவனிடம் 
கேட்டு சொல்வதாய்

நொந்தான் பாரதி 
இதுவா நான் சொன்ன 
பெண்ணுரிமை என

பாரதியின் பயணம் தொடரும் .........