Friday 17 June 2011

நண்பேண்டா....


நட்பு", உச்சரிக்கும்போதே உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறக்கும், உள்ளம் எல்லாம் உற்சாகம் நிரம்பும், நண்பன் என்றவுடன் நம்   இதயத்துள் ஒரு சில முகங்கள் நிழல்லாடும், நட்பு மூன்றெழுத்து மந்திரம் சிறு வயது நட்பு கம்மற்கட்டில் ஆரம்பித்து பாண்டி விளையாட்டு, பம்பரம், என தொடர்ந்து சிறு சிறு சச்சரவு என வளரும். அப்போதெல்லாம் நமக்குள் மிகப்பெரிய பேதம்  ஏற்படுவதில்லை. பள்ளிக்கூட  நட்பு இதுவும் சுவாரஷ்யமானது இதிலும் பெரிதாய் பேதமோ, விரிசலோ, மன புகைச்சலோ இருப்பதில்லை. அடுத்தது கல்லூரி நட்பு வாழ்கையின் வசந்தம் தொடும் வயதில் பூக்கும் நட்பு இது அடிதடி, ஆறுதல், போட்டி என இருந்தாலும் வன்மம் ஏற்படுவதில்லை.  ஆனால் நட்பில் எங்கு வன்மத்தின் வாசம்  அடிக்க ஆரம்பிக்கிறது?????????

மனிதன் வாழ்கையின் உயரம் அறிந்து முன்னேற துடிக்கும்போது நட்பு தூரம் போய் விடுகுறது. அலுவலுக நட்பு என்பது எப்போதுமே பெரிதாய் வாழ்கையில் நேர்மறையான பதிப்பை ஏற்படுத்துவதில்லை. மனிதன் தன் சுய முன்னேற்றத்திற்காக முதல் முறையாக நட்பை கொச்சை படுத்தும் நிகழ்வு இங்கு தான் அரங்கேறுகிறது. இங்குதான் நட்பு முகமூடி இட்டுக்கொல்கிறது. நண்பன் போட்டியாளனாய் அறிமுகமாகிறான், சிரித்த முகம் சிறுத்துவிடுகிறது . நட்புக்களம் போர்க்களமாய் மாறுகிறது. அகம் பார்த்த நட்பு முகம் பார்க்கக்கூட மறுக்கிறது. இது எதனால் மனிதன் மனதளவில் பண்படவில்லை என்றால் நட்பு என்னும் உறவு கல்லூரி வாழ்கையோடு முற்றுப்பெற்றுவிடும். அகநக நட்பிக்காவிட்டலும் முகநக நட்பிக்கலாம்.        
  
 

No comments:

Post a Comment